திருகோணமலையிலிருந்து மான்களை இறைச்சிக்காக கடத்திச்சென்ற இரு கந்தளாய் பகுதியை சேர்தவர்கள் போலிசாரால் மடக்கி பிடிப்பு!!!
திருக்கோணமலை நகரின் விசேட அடையாளங்களில் காட்டு மான்களும் குறிப்பிடத்தக்கதாகும். வீதிகள் மக்கள் நடமாடும் இடமெல்லாம் உலாவி திரிவதும் சிறப்பம்சமே. தற்போது அதிகரித்த பொலித்தீன் பாவனையால் மான்கள் இறப்பதாலம் சில வெளி இடங்களை சேர்ந்த கடத்தல்காரர்கள் மான்களை கடத்திச்செல்வதனாலும் மான்கள் இனம் அருகி வருகின்றது.
நேற்று(06/08/2019) இவ்வாறான கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றது அதை பொலிஸார் முறியடித்துள்ளதாக அறியமுடிகிறது. அதாவது மான்களை இறைச்சிக்காக கடத்தி கந்தளாய் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனமொன்றில் இரு மான்கள் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கந்தளாய் பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.