வாகனேரி இத்தியடி பிள்ளையார் ஆலயம் நேற்று இரவு இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆலயமானது தமிழர்களின் பூர்வீக நிலத்தில் அமைந்துள்ளதோடு அவ்வூர் மக்களின் முக்கியமான வழிபாட்டுத்தமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலய புணரமைப்பு வேலைகளில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் .
இந்த வேளையிலையே இரவு நேரத்தில்
அவ்வாலயத்தின் அமைக்கப்பட்டு வந்த மதில் தூண்கள் மற்றும் ஆலயத்தில் உள்ள பொருட்கள் சிலதை சேதமாக்கியதோடு மனிதக்கழிவுகளையும் அவ்விடத்தில் வீசியுள்ளனர் ஆலயத்திற்குச் சொந்தமான காணியை அபகரிப்பதற்காக முஸ்லீம் அடிப்படை வாதிகள் திட்டமிட்டு செயற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழர் தரப்பு மிக கவனமாகவும் நிதானமாகவும் இப்பிரச்சினைகளை அணுகவேண்டியுள்ளது.
அத்துடன் இவ்விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி எமது பூர்வீக நிலத்தையும் வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்கா வேண்டியது முக்கிய விடயாமிகின்றது.
மேலும் இச் சம்பவம் சம்பந்தமாக சட்டநடவடிக்கைக்காக காவல்துறையிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்கு சந்தாப்பணம் செலுத்திய பற்றுச்சீட்டும் (21/08/2019)ஆலய உள்புறத்திலிருந்து கண்டேடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதோடு அப்பகுதி மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட நடவடிக்கைக்கு
ஆதரவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.