நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணி ஏற்பாட்டில் வவுனியா பொங்குதமிழ் தூபியிலிருந்து ஆரம்பமான “திலீபன் அண்ணாவின் வழியில் வருகின்றோம்” எனும் தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இடம்பெறும் நடைபயணம் வவுனியா மாவட்டத்தின் சிறு நகரங்களான தாண்டிக்குளம் ஓமந்தை புளியங்குளம் எனக்கடந்தது. தமிழ் எழுச்சி பாடல்கள் ஒலிக்க வீதியெங்கும் சிறுவர்கள் தியாகத்தின் அடையாளம் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படதுக்கு மலர்தூவி வணங்க வர்த்தக நிலையத்தார்கள் வீதியில் நடந்து வரும் இளையோருக்கு குளிர் பாணம் நீராகாரம் போன்றவற்றை வழங்கி ஊக்கப்படுத்தியதை அவதானிக்க முடிந்தது இன்றைய தினமும் இதே எழுச்சியுடன் மக்கள் ஆதரவுடன் முன்னணியின் நடை பயணம் கனகராயன்குளம் மாங்குளம் என்று எழுச்சியுடன் நகர்கிறது.
*தமிழ் தேசமும் அதன் இறைமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும்
*ஒற்றையாட்சி முறைமை அரசியல் யாப்பு நீக்கப்படவேண்டும்
*தமிழர் மீதான் இன அழிப்பிற்கு சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணை வேண்டும்
*வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய/பொறுப்புக்கூற சர்வதேச விசாரணை வேண்டும்
*பயங்கரவாதத்தை சட்டம் நீக்கப்படவேண்டும்
*தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்
*தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும்
என்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இவ் நடைபயணம் நாளை கிளிநொச்சி நகரை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.