மல்லாவி, பொன்னகர் ஒட்டன்குளம் பகுதியில் மூன்று துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மல்லாவி பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 03 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேநகர் பொன்னகர், துணுக்காய் பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ள நிலையில், மல்லாவி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.