வவுனியா – செட்டிகுளம், பீடியா பண்ணைப் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு யானையொன்று பலியாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த யானை மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதுண்டுள்ளது.
இந்நிலையில், அப்பகுதிக்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையினை பார்வையிட்டதுடன் யானை 20 வயதுடையது எனவும் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பெரியகட்டு பகுதியில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் யானைகள் வரும்போது சமிக்ஞை காட்டும் இயந்திரம் செயலிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.