காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (30) காலை கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இதன்போது “பிள்ளைகளை உயிருடன் தந்த போது நீங்கள் தான் பாதுகாப்பு செயலாளர், போரில் இறந்தனர் என்று சொல்லும் நீங்கள் இன்று ஜனாதிபதி” என்ற பதாகையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏந்தியிருந்தனர்.இப்போராட்டத்தில் அரியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.