வவுனியா செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெ ரோயின் போதைப்பொருளை பேருந்தில் கடத்திச்சென்ற நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் நகர் பகுதியில் அமைக்கபட்டுள்ள சோதனை சாவடியில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி சென்ற பேருந்தை நேற்றிரவு வழிமறித்து இராணுவம் மற்றும் பொலிஸார் சோதனைகளை மேற்கொண்ட போது குறித்த ஒரு கிலோ ஹெ ரோயின் போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது முழங்காவில் பூநகரியை சேர்ந்த 24 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர் கடந்த நான்கு தினங்களிற்கு முன்னரே மத்திய கிழக்கு நாடு ஒன்றில் இருந்து இலங்கை வந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நடவடிக்கையில் செட்டிகுளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதீப்குமார மற்றும் பொலிஸார், செட்டிகுளம் காலாட்படை இராணுவம் (MIR) ஈடுபட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட ஹெ ரோயின் போதைப்பொருளின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.