தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவியும் நல்லூர் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் அவர்கள்
நேற்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதி திரு.ராஜ்குமார் தாக்கப்பட்டமையினை கண்டித்து விடுத்துள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
நேற்றையதினம் காணமல்ஆக்கப்பட்ட உறவுகளுக்கான ஐனநாயகப் போராட்டம் நடத்தியவேளை திரு .ராஜ்குமார் அவர்கள் வன்முறையான வழியில் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு படு காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார் . இவரை ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியைச்சார்ந்த நபர்கள தாக்குதல்நடத்தியதாகசந்தேகிக்கப்படுவதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது ஒரு ஜனநாயகப் போராட்டம் .இதனை ஐனநாயக வழி அரசியலூடகப்பயணிப்பவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் செய்திருப்பதும் தமது அரசியல் பயணத்தலைப்பிற்கு ஐனநாயக்க்கட்சி எனப் பெயரிட்டுக்கொண்டு இப்படி அநாகரிகமாகவும் வன்முறையாகவும் தாக்குதல் நடாத்தியிருப்பது கண்டனத்திற்குரியதும் நமது உறவைத்தேடுவதில் நம்மவர்கள் என்று கூறிக்கொண்டிருப்பவர்களேம் இப்படி நடந்து கொண்டது வேதனைக்குரியதும். இது மக்களைப்பயமுறுத்தும் ஒரு ஒருஅடாவடி நடவடிக்கைஎன்பதும் மனிதாபிமானமற்ற கண்டனத்திற்குரிய செயலாகும்.
எனக்குறிப்பிட்டுள்ளார்.