தமிழ் தேசிய மக்கள் முன்னணி யாழ் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனுவினை இன்று முற்பகல் தியாகதீபம் லெப்.கேணல் திலிபன் அவர்களின் நினைவு தூபியில் வீர வணக்கம் செலுத்திய பின்னர் யாழ் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்தனர்.
இதன் போது கட்சியின் தலைவர் செயலாளர் உட்பட கட்சியின் வேட்பாளர்களுடன் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.