சீனாவின் ஊஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம்முழுவதையும் சிதைத்துவருகிறது. அமெரிக்கா,இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் கொரோனாவால் பாதிப்பை மிக அதிகமாக எதிர்கொண்டுள்ளன.
உலக அளவில் மிக அதிக கொரோனா பாதிப்பைச் சந்தித்துள்ள அமெரிக்காவில் இதுவரையில், 4,75,873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், 17,820 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 1,57,023 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.
அந்நாட்டில், 15,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில், 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக அளவில் மிக அதிகமாக 18,279 பேரை கொரோனாவுக்கு இழந்துள்ளது இத்தாலி.
அதேபோல, ஜெர்மனியிலும் 1,19,042 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டில், 2,567 பேர் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்திலும் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்துவருகிறது. இன்று மட்டும் 900-த்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில், உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுவரையில் உலகம் முழுவதும் 1,00,200 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
மொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது.