அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பகுதிகளுக்குள் வெளிப் பிரதேசத்தில் இருந்து உட்செல்லவும் அங்கிருந்து வெளிப் பிரதேசத்துக்குச் செல்வதற்கும் பொதுமக்களுக்கு இன்று (11) முதல் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அக்கரைப்பற்று பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், பிரதேச சுகாதாரப் பணிப்பாளர், பொதுச் சுகாதார உத்தியோகத்தர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்
ஆகியோரின்
பங்கேற்றலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதேசத்தில் நோய்த் தொற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும்போது சமூக இடைவெளிளைப் பேணுவதற்காக திருக்கோவில் பிரதேசத்தின் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.