அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல் துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது.
கொரோனா வைரசுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.