மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இருந்து ஆரையம்பதிக்கு வானில் மதுபானம் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் 65 போத்தல் மதுபானங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில், கல்லடிப் பாலத்திற்கு அருகில் உள்ள வீதிச் சோதனைச் சாவடியில் வைத்து நேற்று (சனிக்கிழமை) இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேளை, வாகனம் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸ் சீருடையில் இருந்தநிலையில் மதுபானப் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த வாகனத்தில் இருந்து, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் வாகன சாரதி ஆகிய இருவம் கைதுசெய்யப்பட்டதோடு 65 போத்தல் மதுபானங்களையும் வாகனத்தையும் பொலிஸால் பறிமுதல் செய்தனர்.
குறித்த வாகனம் வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலையில் இந்த சட்டவிரோத மதுபான கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இருவரையம் தற்காலிகமாக கடமையிலிருந்து இருந்து பொலிஸ் அத்தியட்சகர் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.