அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் காலம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரண்டாம் தவணைக்காக அனைத்து பாடசாலைகளும் மே மாதம் 11 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
பாடசாலை நடைபெறாத காலப்பகுதியில் மாணவர்களுக்கு முடியுமானளவு தொலைக்கல்வி வசதிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய
மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.