கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல் சொந்த நாட்டு மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளிவிட்டிருக்கிறார் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவை உலுக்கிக் கொண்டிருக்கிறது.
அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 60,433 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், பலி எண்ணிக்கை 22,115ஆக உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை பன்மடங்காகிக் கொண்டிருக்கிறது.
எனினும், இது தொடர்பில் ஆரம்பித்தில் அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும்,
சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதி செயல்பட்டுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.