கொரோனா வைரஸ் தாக்கத்தினை முறியடிக்க முடியாமல் உலக வல்லரசுகள் திணறிக் கொண்டிருக்கையில் ஸ்ரீலங்கா அதனை வெற்றிகரமாக முறியடித்துக் கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பெருமிதம் வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது முப்படையினரும் 100 வீத வெற்றிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கின்றனர்.
தனிமைப்படுத்தப்பட்ட எந்தவொரு நபராலும் மற்றொருவருக்கு வைரஸ் தொற்ற இடமளிக்காமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் செயற்பாடு என்பது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தங்கள் வாழ் நாளில் முதல் முறையாக கற்ற விடயமாகும்.
எனினும் முடியாத விடயங்கள் என்று ஒன்றும் இல்லை என நிரூபித்து இந்த செயற்பாடுகளை இராணுவத்தினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அதற்கமைய சுகாதார அதிகாரிகளினால் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைய செயற்பட்டால் எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
இது ஸ்ரீலங்காவிற்கு 5வது வாரமாகும். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது ஸ்ரீலங்கா வெற்றிகரமான இடத்தில் உள்ளது” என்றார்.