கிளிநொச்சியில் நேற்று பெய்த கடும் மழையால் வெள்ளத்தில் முழ்கிய பொதுச்சந்தைகிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று மாலை (06.05.2020) காற்றுடன் கூடிய இடிமின்னலுடனான மழை காரணமாக கிளிநொச்சி பொதுச்சந்தை வியாபாரிகளின் பெருமளவு மரக்கறிகள் மழையில் நனைந்துள்ளது .கொரோனா பாதுகாப்பு கருதி சமூக இடைவெளியை பேணும் வகையில் சந்தையின் வெளிப்புறத்தில் தகர பந்தல்கள் அமைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் தீடிரென பெய்த கடும் மழை காரணமாக விற்பனை பகுதிக்குள் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.அத்தோடு மழையோடு கடும் காற்றும் வீசியதனால் தகர கொட்டகைகள் பிடுங்கி வீசப்பட்டதுடன் அதிக மழை காரணமாக குறுகிய நேரத்தில் ஏற்பட்ட வெள்ளம் மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் வியாபாரிகள் அவலப்பட்டுள்ளனர்.