தமிழரின் வளங்கொழிக்கும் சொத்தாகவும் உலகநாட்டு மக்களின் சுற்றுலா மையமாக திகழும் பாசிக்குடா கடற்கரை அழகிய பிரதேசத்தில் பலர் தங்களுக்கு பௌத்த விகாரை, பள்ளிவாசல் அமைக்க இடமில்லையே என குமுறிக்கொண்டிருக்கும் போது தமிழரின் ஆலயம் குறித்த பகுதியில் புனரமைப்பியின்றி கடல்காறற்றிலும் மிதமான அலையிலும் தாலாட்டும் ரம்மியமான சூழலில் காணப்படும் முருகப்பெருமான் ஆலயம் கைவிடப்பட்ட நிலையில் பராமரிப்பும் அபிவிருத்தியின்றி காணப்படுவது கவலைக்குரியதாகும்.
முனை முருகன் ஆலயம் திருத்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது ?
பாசிக்குடா கடற்கரைக்கு நேர் எதிரே உள்ள பெரிய கடற்கரைக்கும் இடைய ஒரு முனைப்பகுதி உள்ளது அந்த முனைப்பகுதி இறுதியில் அமைந்துள்ளது முருகன் ஆலயம் நெய்தலும்,குறிச்சியும், முல்லையும் சேர்ந்து இயற்கை எழில் கொஞ்சும் அழகிடம் முனை முருகன் கோயில் என்று அழைப்பர்.
இந்த கோயிலில் இருந்து ஒரு 150 m அளவில் போத்துக்கீசர் கப்பல்களுக்கு சைகை காட்டும் வெளிச்ச் வீட்டுக்கு இணைவான ஒரு கட்டிடத்தையும் அமைத்திருந்தனர் இப்போது சுனாமியில் அழிந்துவிட்டது.
நம்முன்னேர்கள் குறிஞ்சி குன்றில் இந்த கோயிலை அமைத்து வழிபட்டு வந்ததுடன் பல வெளிநாட்டவர்களும் இந்த கோயிலில் வழிபட்டு இறை அருளால் வேண்டுதல்கள் நிறைவு பெற்ற வரலாறுகளும் உண்டு. அத்தோடு நாக வழிபாடும் இயற்கையுடன் கூடிய நாக பாம்புகள் இக்கோயிலின் மேலாக பறந்து செல்வதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.
இந்த பகுதி மக்கள், மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது நேர்த்திக்கு கல்லை கட்டிச்சென்று,வந்ததும் கல்லை அவிழ்த்து நேற்றியை நிறைவேற்றுவதும் உண்டு
இதை கேள்வி உற்ற சிங்களவர்களும் தற்போது இந்த கோயிலுக்கு சென்று நேர்த்தி கல்லை கட்டிவிட்டு செல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்தநிலையில் இக்கோயிலானது கடந்த பல வருடங்களாக கட்டப்பட்டு வேலைகள் பூர்தி அடையாமல் அறைகுறையில் கிடக்கிறது இவ்வாறே நிலைமை தொடர்ந்தால் முருகனுக்கு துணையாக அவ்விடம் ஆசையை துறந்தவர் சிலை ஒன்று வருவதற்கு வெகுகாலம் எடுக்காது.
ஆக்கிரமிப்புக்கு முன் நடவடிக்கை எடுக்க போகிறோமா அல்லது பின் அதை எதிர்த்து காலம் காலமாக நீதி மன்றம் செல்ல போகிறோமா ????